St. Jude the Apostle

புனித யூதா இயேசுவின் பனிரெண்டு அப்போஸ்தவர்களில் ஓருவரும். யாகப்பரின் சகோதரனுமாவார். நற்செய்தியாளரான புனித மத்யேயு, யூதாவை இயேசுவின் " உடன்பிறப்புகளில்" (13.55) ஒருவராக கருதுகின்றார். ஏபிரேய மொழியில் "உடன்பிறப்பு" ஓரு இரத்த உறவை குறிப்பிடுவதனால், இங்கு யூதாவை இயேசுவின் (சிற்றப்பன், பெரியப்பன், அல்லது மாமன் மகன் உறவாக கருதலாம்) உடன் பிறவா சகோதரனாக கருதலாம். மற்றொரிடத்தில் யூதாவின் அன்னையை இயேசுவின் தாய் மரியாளின் சகோதரியாக குறிப்பிடப்பட்டுள்ளது.

புனித லூக்காஸ் நற்செய்தியானது யூதாவை அப்போஸ்தவர்களின் பட்டியல் (6.16) சேர்த்துள்ளது. புனித யோவான் அவரைப்பற்றி குறிப்பிட்டுள்னர் (14.22) புனித மத்தேயு (10.3) மற்றும் மாற் (3.18) அவரை யூதா என்று பயன்படுத்தாமல் ததேயு என பயன்படுத்துகின்றார். தொன்றுதொட்டு கத்தோக்க விவிய அறிஞர்கள் யூதாவும், ததேயுவும் ஒரே ஆள்தான் என கூறிவந்தார்கள்.

அல்லல்படுபவர்கள் மற்றும் நம்பிக்கை இழந்தவர்களின் பாதுகாவலர் என்னும் யூதா பக்தி எப்போது தொடங்கியது என சரியாக தெரியவில்லை. இயேசுவை மறுத்த யூதாஸ் இஸ்காரியோத் மற்றும் அப்போஸ்தலரான புனித யூதா இவர்களின் பெயர்களுக்கிடையே மக்களுக்கு எழுந்த குழப்பமே இந்த பக்தி முயற்சியை பல நூற்றாண்டுகளாக வளர விடாமருக்கலாம். இடைக்காலத்தில் இந்த யூதா பக்தி இருந்த போதும். அது அண்மையில் தான் மக்களிடையே பிரபலமாகி வருகின்றது.

பழங்காலத்திருந்தே புனித யூதா இயேசுவின் உருவத்தை கையில் சுமப்பவராக சித்தரிக்ப்பட்டு வந்தது. இது புகழ் பெற்ற கதையான எடேசாவின் அபகார் அரசன் தன்னை தொழுநோயினின்று குணம் அளிக்க இயேசுவை கேட்பதிலும், அவர் ஓவியன் ஒருவனி‌டம் இயேசுவின் வரைப்படத்தை கொண்டுவர அனுப்பியதிருந்தும் வந்தது என்பர். அரசன் அபகாரின் விசுவாசத்தை கண்டு பூரிப்படைந்த இயேசு தனது முகத்தை ஒரு துகில் பதித்து அரகனிடம் எடுத்து செல்லுமாறு யூதாவை பணித்தார் இயேசுவின் முகம் பதிந்த துகிலை பார்த்த உடனேயே அரசன் குணம் பெற்றான் குணம் பெற்ற அரசன் கிறிஸ்தவனாக மாறி, ஏராளமான மக்களையும் கிறிஸ்தவர்களாக மாற்றினான். புனித யூதாவின் தலையை சுற்றி இருக்கும் ஒளிவட்டம் பெந்தேகோஸ்தே நாளில் மற்ற அப்போஸ்தவர்களுடன் சேர்ந்து பரிசுத்த ஆவியை பெற்றுக் கொண்டதை குறிக்கிறது.

இயேசுவின் இறப்பிற்கு பிறகு புனித சிமோனோடு சேர்ந்து புனித யூதா மெசப்பட்டோமியா, பியா ,மற்றும் பாரசீகம் முழுவதும் நற்செய்தி அறிவித்து மக்களை கிறிஸ்தவர்களாக மாற்றினார். அவர் சிரியா, அல்லது பாரசிகத்தில் தான் வேதசாட்சியாக இறந்தார் என நம்பப்டுகிறது. புனித யூதா ஏந்தியிருக்கின்ற கோடாரியானது அவர் கொல்லப்பட்ட விதத்தையும். விசுவாசத்திற்காக உயிர் நீத்ததையும் சித்தரிக்கிறது. அவர் இறப்பிற்கு பிறகு அவரது பூத உடலை ரோமாபுரியிலுள்ள புனித இராயப்பர் பேராலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் புனித பெர்ணார்டு ஓரு யூதா பக்தனாக இருந்தார். ஸ்வீடன் நாட்டின் புனித பிரிட்ஜெட்டுக்கு இயேசு காட்சி அனித்து புனித யூதாவிடம் நம்பிக்கை வைக்க கோரினார். இயேசு அவளிடம். "ததேயு என்ற யூதாவின் பெயரைப்போல (ததேயு என்றால். தாராள மன முடையவர். தைரியசா மற்றும் இரக்கமுள்ளவர் என பொருள்) அவர் உனக்கு உதவி செய்வார்." என்றார்.

மனித இனம் அறிவியல் முன்னேற்றமடைந்த போதும் .மனிதன் கவலையாலும். மன உளழச்சலாலும் அலதியுறுகின்றான்.அப்படி அறிவியல். தொழில் நுட்பங்களால் கொடுக்க முடியாத மன அமைதியும். நம்பிக்கையும் பெற மனிதன் புனித யூதாபக்கம் திரும்புகின்றான். இந்த சூழ்நிலையில் புனித யூதா ஒரு உண்மை நண்பனாகவும் நம்பிக்கையின் நாயகனாகவும் விளங்குகின்றார் என்பது மறுக்க முடியாத உண்மையே அல்லன் நேரமான இன்று புனித யூதா துனண இன்றியமையாததே.

திருச்சபையானது வான்வீட்டின் சபையுடன் தன்னையே ஒன்றிணைத்துள் ளது என்பது நமது விசுவாசம். கிறிஸ்துவின் நாம் அனைவரும் சகோதர சகோதரிகள். நாம் மற்றவர்களுக்காக ஜெபிக்கின்ற வேளையில், புனிதர்களின் பரிந்துரையை வேண்டுகிறோம். திருச்சபை, "உண்மையானபுனிதர் வழிபாடு வெளி காரியங்களை பெருக்குவதில்லை, மாறாக செயலார்வமுள்ள அன்பின் ஆழத்திலே தான் அடங்கியிருக்கிறது, இதே அன்பினால் தான் நம்முடைய திருச்சபையுடையவும் மெரு நன்மைக்காக புனிதர்கள் வாழ்விலே மாதிரிகையும், அவர்களின் ஒன்றிப்பிலே தோழிமையும், அவர்கள் பரிந்து பேசுவதால் உதவியும் அவர்களிடமிருற்து தேடுகிறோம், "என்கிறது ( சங்க ஏடுகள், "திருச்சபை" 51).

"மூவொரு கடவுள் தான் அருள் வாழ்வின் அடிப்படை", என்கிறது திருச்சபை. புனித யூதா நம்சகோதரனாக நமக்காக உன்னத கடவுளிடம் வேண்டுகிறார். கோடிக்கணக்கான மக்களின் சாட்சியத்துடன் புனித யூதா ஓரு வல்லமை மிக்க பரிந்துரையாளராக கருதப்படுகிறார் என்றாலும். கடவுள் தான் நம் ஜெபங்களுக்கு பதில் அளிக்கின்றார்.புனித யூதா. தன்னை கூவி அழைப்பவர்களை எல்லாவித வேதனைகளிருந்தும், அறிவியனால் குணப்படுத்த முடியாத வியாதிகள். பஞ்சம். மனக்கவலை, மன உழக்சல்.குடும்ப கவலைகளிருந்து நம்மை விடுவித்து காக்கின்றார். இப்படி, புனித யூதா தன்னை ஒரு நண்பனாகவும் நம்பிக்கையின் நாயகனாகவும்,அவரது பரிந்துரைகளை நாடுபாவர்களூக்கு நிரூபித்து காட்டுகின்றார்.